ETV Bharat / bharat

நேபாளத்தில் 5.5 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று (ஜூலை.31) காலை 5.5 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்
ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்
author img

By

Published : Jul 31, 2022, 6:48 PM IST

நேபாளநாட்டின் தலைநகரான காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று(ஜூலை.31) காலை 7.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, பிஹாரின் கதிஹார், முங்கர், மாதேபுரா மற்றும் பெகுசராய் ஆகியப்பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது ரிக்டரில் 5.5ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியா, சீனா மற்றும் நேபாளத்தின் பல நகரங்களில் உணரப்பட்டுள்ளன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. இதனால், சில பகுதிகளில் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு தேடி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அந்நாட்டு அரசால் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடு செல்ல முற்பட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பைச்சந்தித்துள்ளனர்.

மேலும் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் எப்பொழுதும் இல்லாத வகையில் உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு சேதங்களை ஏற்படுத்திவருகின்றன. இதனால் பேரழிவுகளைக்கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  • #Earthquake in #Kathmandu, Nepal

    An earthquake of magnitude 5.5 on the Richter scale occurred 147 km east-southeast of Kathmandu, Nepal at 0758 hours.

    Tremors felt in #Patna and Mithila region of #Bihar

    — The Tall Indian (@BihariBaba1008) July 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.