ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் டிராக்டர் தொட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து வாராங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) 10 பேர் டிராக்டரில் வாராங்கல்லில் இருந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு குளத்தின் அருகே டிராக்டர் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராமல் டிராக்டரின் பின்னே இருந்த தொட்டி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் புலனாய்வு அலுவலர் தவறி விழுந்து உயிரிழப்பு