ETV Bharat / bharat

44 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: ஒன்றிய அரசு உத்தரவு - 19 crore covaxin

டெல்லி: கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மேலும் 44 கோடி தடுப்பூசிகளை (25 கோடி கோவிஷீல்டு + 19 கோடி கோவேக்ஸின்) வாங்க ஒன்றிய அரசு நேற்று கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளது.

'நாட்டில் தற்போது இருப்பில் 44 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள்'

author img

By

Published : Jun 9, 2021, 2:21 AM IST

Updated : Jun 9, 2021, 7:23 AM IST

உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் புதிதாகத் தடுப்பூசிகளைப் பெற ஒன்றிய அரசு விண்ணப்பித்துள்ளது. இது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

'முழுமையான அரசின்' அணுகுமுறையுடன் இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசித் திட்டத்தை இந்திய அரசு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆதரவுடன் தொடங்கியது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மே 1ஆம் தேதிமுதல் தாராளமயமாக்கல் மூன்றாம்கட்ட தடுப்பூசி உத்தியின்கீழ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தற்போது அடுத்தக்கட்டமாக, அரசு சுகாதார மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தேசிய கோவிட் தடுப்பூசித் திட்டத்தின் வழிகாட்டுதல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து பிரதமர் நேற்று அறிவித்ததை அடுத்து, உடனடியாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'நாட்டில் தற்போது இருப்பில் 44 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள்'
‘44 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வாங்க ஆர்டர் பிறப்பிப்பு’

இதன்படி சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திடமிருந்து 25 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 19 கோடி டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசியையும் பெறுவதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்த 44 கோடி டோஸ்கள் (25+19 கோடி) தற்போதுமுதல் டிசம்பர் 2021 வரை இருப்பில் இருக்கும்.

கூடுதலாக, கொள்முதல்செய்வதற்கான 30 விழுக்காடு முன்பணம் இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 9, 2021, 7:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.