உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே சுரங்கம் அமைக்கும் பணியின்போது, சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த சரிவினால், சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
தீபாவளி அன்று காலை 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். மேலும், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
-
#WATCH | Union Minister General VK Singh (Retd) arrives at Silkyara tunnel in Uttarkashi to review progress of the ongoing rescue operation to save the lives of 40 workers stuck inside the tunnel following land slide pic.twitter.com/9W1CdqBCLr
— ANI (@ANI) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Union Minister General VK Singh (Retd) arrives at Silkyara tunnel in Uttarkashi to review progress of the ongoing rescue operation to save the lives of 40 workers stuck inside the tunnel following land slide pic.twitter.com/9W1CdqBCLr
— ANI (@ANI) November 16, 2023#WATCH | Union Minister General VK Singh (Retd) arrives at Silkyara tunnel in Uttarkashi to review progress of the ongoing rescue operation to save the lives of 40 workers stuck inside the tunnel following land slide pic.twitter.com/9W1CdqBCLr
— ANI (@ANI) November 16, 2023
பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சுரங்கத்தின் சுவர்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணி நடைபெற்று வந்தபோது சுரங்கத்தில் மீண்டும் சரிவு ஏற்பட்டதால், மீட்புப் பணியில் சுனக்கம் ஏற்பட்டது. பின்னர், அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், விபத்து ஏற்பட்டு ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொழிலாளர்களை விரைவாக மீட்பதற்காக விமானப்படை விமானங்கள் மூலம் அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது என தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக லிமிடெட் (NHIDCL) சுரங்கப்பாதை திட்ட இயக்குனர் அன்ஷு மணீஷ் குல்கோ தெரிவித்துள்ளார்.
சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளி ஒருவரின் தந்தை தரம் சிங், “எனது மகனும் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளார். எல்லாம் சரியாகிவிடும் என்றும், இன்று மாலைக்குள் வெளியே கொண்டு வந்து விடுவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு மருத்து உதவி தேவையில்லை. ஆனாலும், மருத்துவக்குழு தயாராக உள்ளது. இயந்திரம் பொருத்தும் பணி முழுமையடைந்துள்ளது. விரைவில் அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்படுவார்கள் என தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் கிர்தாரிலால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து ஆய்வு செய்தார். மேலும், மத்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு மாநில நிர்வாகத்திற்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
#WATCH | On arriving at Uttarakhand's Uttarkashi to take stock of the operation to rescue 40 workers who are stuck inside the Silkyara tunnel, Union Minister General VK Singh (Retd) says, "Rescue operation is underway, we have full hope. We are trying our best." pic.twitter.com/M1pXGYFBbn
— ANI (@ANI) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | On arriving at Uttarakhand's Uttarkashi to take stock of the operation to rescue 40 workers who are stuck inside the Silkyara tunnel, Union Minister General VK Singh (Retd) says, "Rescue operation is underway, we have full hope. We are trying our best." pic.twitter.com/M1pXGYFBbn
— ANI (@ANI) November 16, 2023#WATCH | On arriving at Uttarakhand's Uttarkashi to take stock of the operation to rescue 40 workers who are stuck inside the Silkyara tunnel, Union Minister General VK Singh (Retd) says, "Rescue operation is underway, we have full hope. We are trying our best." pic.twitter.com/M1pXGYFBbn
— ANI (@ANI) November 16, 2023
இந்நிலையில், சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், தற்போது சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.