ETV Bharat / bharat

பீகாரில் 4 வெளிநாட்டவருக்கு கரோனா தொற்று உறுதி - new covid variant in india

பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் பீகார் வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகாரில் 4 வெளிநாட்டவருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Dec 26, 2022, 10:40 AM IST

பாட்னா: தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து 4 பயணிகள் பீகார் மாநிலம் கயா விமான நிலையத்துக்கு டிசம்பர் 20ஆம் தேதி வந்தடைந்தனர். அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 3 பயணிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் போத்கயாவில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். முதல்கட்ட தகவலில் இவர்கள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், திபெத்திய ஆன்மீக குரு தலாய் லாமாவின் போதனை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பீகார் வந்துள்ளதும் தெரியவந்தது.

இதனால் இவர்களுடன் வந்த மியான்மாரை சேர்ந்த 4ஆவது பயணியையும் தனிமைப்படுத்தினர். அவருக்கு நேற்று (டிசம்பர் 25) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திபெத்திய ஆன்மீக குரு தலாய் லாமா போதனை நிகழ்வுக்காக போத்கயா வந்துள்ளார். இதுபோன்ற ஆன்மிக நிகழ்வில் 50 நாடுகளில் இருந்து 60,000 பேர் கலந்துகொள்வது வழக்கம். இந்த நிகழ்வு டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து ஆன்மிக பயணிகள் பீகாருக்கு படையெடுத்துவருகின்றனர். சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் BBV154 வகை கரோனா தொற்று பரவிவருகிறது. சீனாவில் மட்டும் நாளொன்றுக்கு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.