ETV Bharat / bharat

ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நான்கு நாள்கள் வங்கிகள் இயங்காது

வங்கிகளின் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக, நான்கு நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

Bank holiday
வங்கி
author img

By

Published : Mar 12, 2021, 9:44 PM IST

ஹைதராபாத்: கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், மார்ச் 15, 16 என இரண்டு நாட்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நாளை இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை என்பதால், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பணம் செலுத்துவது, எடுப்பது உள்ளிட்ட நேரடியாக நடக்கும் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படவுள்ளது.

மேலும், இந்தப் போராட்டத்தில் ஸ்கேல்-4 ரேங்கில் உள்ள ஊழியர்களும் பங்கேற்பதால், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வேலைகளும் நடைபெறாது எனக் கூறப்படுகிறது. இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள். அதே சமயம், தனியார் வங்கிக் கிளைகள் வழக்கம்போல் இந்த வேலைநிறுத்த நாள்களில் செயல்படும். இதில் தனியார் வங்கிகள் பங்கேற்கவில்லை.

இதையும் படிங்க: 'நைட் பார்ட்டி' போலீஸ் ரெய்டில் 90 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.