ETV Bharat / bharat

தீப்பிடித்து எரிந்த ராணுவப் பயிற்சி வாகனம்: 3 வீரர்கள் உடல் கருகி உயிரிழப்பு! - ராஜஸ்தானில் ராணுவ பயிற்சி வாகனம் விபத்து

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ராணுவப் பயிற்சி வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், மூன்று வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

Rajasthan
பயிற்சி வாகனம் விபத்து
author img

By

Published : Mar 25, 2021, 7:57 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ராணுவப் பயிற்சி வாகனம் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், வாகனத்திலிருந்த மூன்று வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஐவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரப் பயிற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து ராணுவ வீரர்களும், பதீந்தாவின் 47ஏடி படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Chief Minister Ashok Gehlot
முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல்

ராணுவ வீரர்கள் மறைவுக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், "ஸ்ரீ கங்காநகரில் உள்ள சூரத்கரில் நடந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். இதில், மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக மீண்டுவர கடவுளைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சரக்கு வாங்க காசு இல்லாமல் சானிடைசர் குடித்து உயிரைவிடும் மதுப்பிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.