ETV Bharat / bharat

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்தது தொடர்பான தகராறில் மாமனார் குடும்பத்தினர் மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை
author img

By

Published : Sep 27, 2021, 6:52 AM IST

ஜார்கண்ட்: கும்லா மாவடத்தைச் சேர்ந்தவர் பந்தன் ஓரான் (55). இவரது மனைவி சோமாரி ஓரான் (40). இவர்களது மருமகள் பஸ்மணி தேவி. பந்தன் ஓரான் தனது வய்லவெளிக்கு சென்றுவிட்டு நேற்றிரவு (செப்.25) வீட்டிற்கு வந்தார்.

பின்னர், அவர் வீட்டில் உணவு உட்கொண்டிருந்தபோது, பயங்கர சத்தத்துடன் வந்த அவரது மருமகன்கள் பிபட் ஓரான், ஜூலு ஓரான் ஆகியோர் பந்தன் ஓரானை கோடாரியால் வெட்டினர்.

மேலும், அங்கிருந்த அவரது மனைவி சோமாரி ஓரானையும் வெட்டினர். அவர்களது அலறம் சத்தம் கேட்டு வந்த மருமகள் பஸ்மணி தேவியையும் வெட்டிக் கொலை செய்தனர்.

கொலை குறித்த விசாரணை

இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, பிபட் ஓரான், ஜூலு ஓரான் ஆகியோர் காவல் நிலையம் சென்று சரணடைந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்த மூவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சரண் அடைந்தவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பந்தன் ஓரான் குடும்பத்தினர் சூனியம் வைத்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களை கொலை செய்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் நேர்ந்த கொலை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.