டெல்லியில் கரோனா தொற்றால் தினமும் குறைந்தது 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காவல் துறையினரும் விதிவிலக்கு அல்ல. அந்தவகையில் பாரத் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் அங்கித் சவுத்ரிக்கு (29) கடந்த 15ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து இவருக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பிளாஸ்மா நன்கொடை செய்யவும் ஆட்கள் தயார் நிலையிலிருந்தனர். ஆனால் துணை ஆய்வாளர் அங்கித் சவுத்ரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று (ஏப்ரல்.23) மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
தீவிரமாக கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பேசமுடியாமல் தான் சொல்ல வருவதை எழுதிக் காண்பிக்கும் போது எடுத்த வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 2 வயதில் குழுந்தை ஒன்று உள்ளது.
டெல்லியில் மார்ச் மாதம் இறுதி வரை சுமார் 1,500 காவல் துறையினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.