புதுச்சேரி : கரோனா விழிப்புணர்வு புத்தக கண்காட்சி புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை என பத்து நாள்கள் 25ஆவது தேசிய புத்தக கண்காட்சி (வெள்ளிவிழா) நடைபெறவுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக எழுத்தாளர் புத்தக சங்க சிறப்பு தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்தளை சந்தித்து பேசுகையில்,” இக்கண்காட்சியில் புதுச்சேரி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி, முதலான இந்திய பகுதிகளில் இருந்து சுமார் 70 வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன. மேலும் கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்கு தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இடம் பெறும் நூல்களூக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும்”என்றார்.
இதையும் படிங்க : நீதிக்காக ஒரே ஒரு தோட்டாவை சுட்ட புரட்சியாளர் பகத் சிங்!