தெலங்கானா மாநிலம், வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலர்கள் (டிஆர்ஐ) விஜயவாடா - ஹைதராபாத் நெடுஞ்சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,கவுகாத்தியில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 25 கிலோ எடையுள்ள 11.63 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தங்கத்தை டிஆர்ஐ அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹைதராபாத்திற்கு தங்கம் எடுத்துச்செல்வதும், காரின் டாஷ்போர்டில் தங்கம் மறைத்து கடத்தப்படுவதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: 'துபாய்க்கு 1.03 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் கடத்த முயன்றவர் கைது!'