தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருவதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இரண்டு பார்சல்களில் 59 கிலோ எடைகொண்ட 24 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இன்று (மே.18) சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
இதில், 24 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்தும் சென்னை காவேரி தனியார் மருத்துவமனைக்கு என்று தனியாக வரவழைக்கபட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை இணைதளத்தில் பதிவு செய்து பெறலாம்!