பாலக்காடு: கேரளா பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்ட சேர்ந்த பாலசுப்ரமணியம் (23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 சிறுமியை நேற்று (ஏப். 24) காலை தனது வீட்டிற்கு வரவழைத்து அவரை தீவைத்து கொளுத்தியுள்ளார். மேலும், தன் மீதும் தீவைத்து அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து, இருவரையும் உடனடியாக திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் நேற்று உயிரிழந்தனர்.
முதற்கட்ட தகவலில், சிறுமியை தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாலசுப்ரமணியம் வீட்டிற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இருவரும் நீண்ட நாளாக காதலித்து வந்ததாகவும், இருவரின் குடும்பமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பாலசுப்ரமணியம், சிறுமி மீது தீவைத்த போது, அவரின் தாயரும், தம்பியும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இதுகுறித்து, பாலசுப்ரமணியத்தின் தாயார், காதல் குறித்தோ தன்னிடம் ஏதும் கூறவில்லை என்றும் வீட்டிற்கு அந்த சிறுமி வந்தது தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவி கர்ப்பம்... சமையல் செய்த கணவருக்கு நேர்ந்த சோகம்...