ETV Bharat / bharat

RECAP 2021: 21 முக்கிய தேசிய நிகழ்வுகள் - ஒரு மீள்பார்வை - kashi vishwanath dham

நடப்பாண்டில் (2021) நடைபெற்ற தேசிய நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்குக் காணலாம்.

RECAP 2021, 21 முக்கிய தேசிய நிகழ்வுகள், 21 Important National Incidents Happened in 2021, 2021 ஒரு மீள்பார்வை, India Biggest stories 2021
RECAP 2021
author img

By

Published : Dec 30, 2021, 1:23 PM IST

1. இந்தியாவில் கரோனா தடுப்பூசி

  • ஜனவரி 2 - முதலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் அரசின் ஒப்புதல் கிடைத்தது.
  • ஜனவரி 16 - மருத்துவப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி
  • பிப்ரவரி 2 - முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி
  • மார்ச் 1 - 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி
    இந்தியாவில் தடுப்பூசி, Modi Vaccine, தடுப்பூசி செலுத்தும் பிரதமர் மோடி
    பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது
  • மே 1 - 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி
  • மே 17 - இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இது இந்தியாவின் மூன்றாவது தடுப்பூசி
  • அக்டோபர் 21 - இந்தியாவில் கரோனா தொற்று தடுப்பூசி 100 கோடி தவணைகள் என்ற மைல்கல்லை எட்டியது
  • டிசம்பர் 25 - குழந்தைகளுக்கான (15-18 வயது) கரோனா தொற்று தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி (மூன்றாம் தவணை) குறித்து பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

2. ஐந்து மாநிலத் தேர்தல்கள்

  • பிப்ரவரி 26 - தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
  • மார்ச் & ஏப்ரல் - தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றில் ஒரே கட்டமாகவும், அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • மே 2 - தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணமூல் கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்தன.
  • இந்திய தேர்தல் ஆணையம், Election Commission of India, 5 மாநில தேர்தல், 5 State Election
    இந்திய தேர்தல் ஆணையம்
  • புதுச்சேரியில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்த நிலையில் ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். அஸ்ஸாமில் மீண்டும் பாஜக வெற்றிபெற்று, ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

3. கரோனா தொற்றால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டம்

  • மே 29 - கரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.
  • பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு, அதில் ரூ. 10 லட்சம் வைப்புத்தொகை வைக்கப்பட்டு, மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும், அவர்கள் 23 வயதை எட்டும்போது ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

4. பெகாசஸ் என்னும் பேரலை

  • ஜூலை 19 - இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓவின் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளைக் கொண்டு உலக முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
  • பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவர், மூத்த பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்எஸ்எஸ் மூத்தத் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் செல்போன்கள், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றால் ஒட்டுகேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    பெகாசஸ் உளவு மென்பொருள்
    பெகாசஸ் உளவு மென்பொருள்
  • அக்டோபர் 27 - இது குறித்து, விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவினை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

5. ராஜ் குந்த்ரா கைதும் - பிணையும்

  • ஜூலை 19 - நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
    ராஜ் குந்த்ரா கைது, Raj Kundra Arrest
    ராஜ் குந்த்ரா கைது
  • செப்டம்பர் 21 - இரண்டு மாதம் சிறைவாசத்திற்குப் பிறகு மும்பை ஆர்தர் ரோடு நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.

6. கரோனா பாதிப்புக்கு ரூ. 6,28,993 கோடி ஒதுக்கீடு

ஜூலை 29 - கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல அறிவிப்புகளை ஜூலை 29ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மொத்தம், 17 அறிவிப்புகளுக்கு ஆறு லட்சத்து 28 ஆயிரத்து 993 கோடி ரூபாயை ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது

7. மருத்துவப்படிப்பில் 27% ஓபிசி இடஒதுக்கீடு

ஜூலை 30 - இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீடாக பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடும் ஒதுக்கீடு செய்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.

8. தயான் சந்த் கேல் ரத்னா

ஆகஸ்ட் 6 - விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவந்தது. இவ்விருது இந்திய ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

Dhayan Chand Khel Ratna
தயான் சந்த் கேல் ரத்னா

9. நாடு முழுவதும் ஒரே பதிவெண்

  • ஆகஸ்ட் 28 - புதிய வாகன பதிவில் BH (Bharat series) எனத் தொடங்கும் பதிவெண்ணை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகம்செய்தது.
  • மோட்டார் வாகன சட்டப்படி, ஒரு மாநிலத்தில் பதிவுசெய்த வாகனத்தை, வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லும்பட்சத்தில் ஒரு வருடத்திற்குள் புதிய மாநில அங்கீகாரத்துடன் புதிய வாகன பதிவைப் பெறுவது கட்டாயமாகும்.
    BH Series
    பிஹெச் சீரிஸ்
  • தற்போது, பி.ஹெச். சீரிஸ் வாகனங்கள் வைத்திருந்தால் நாட்டிலுள்ள எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வாகனப் பதிவை மாற்றாமல் சாலைகளில் பயணிக்க முடியும்.
  • செப்டம்பர் 15 - மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முதலில் வழங்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. தனியார் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கிளைகள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் இருக்கும்பட்சத்தில் பி.ஹெச். வாகன பதிவைப் பெற முடியும்.

10. புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடம்

ஆகஸ்ட் 28 - பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்னும் பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் அடக்குமுறைக்கு ஆளாகி உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம் உள்ளது. அந்த நினைவிடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது. அதன் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களையும், அருங்காட்சியக காட்சிக் கூடங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

11. இந்தியாவின் மிகப்பெரும் ஹெராயின் பறிமுதல்

  • செப்டம்பர் 18 - குஜராத்தின் முந்த்ராவில் அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் நடத்திய சோதனையில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,988.22 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
  • இவ்வழக்கில், ஐந்து வெளிநாட்டினர் உள்பட மொத்தம் எட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
    3000 கிலோ ஹெராயின் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல், 3000 kg Heroine
    3000 கிலோ ஹெராயின் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல்

12. ஷாருக் கான் மகன் கைது

  • அக்டோபர் 2 - மும்பை அருகே அரபிக்கடலில் கார்டிலியா என்னும் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையில், போதை மருந்து வைத்திருந்தாக நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் உள்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
  • அக்டோபர் 30 - முறையான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படாததால், ஆர்யன் கானுக்கு பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் சிறையிலிருந்து வீடு திரும்பினார்.
    ஷாருக் கான் மகன் கைது, Aryan Khan Arrest
    ஷாருக் கான் மகன் கைது

13. லக்கிம்பூர் கெரி வன்முறை

  • அக்டோபர் 3 - உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் கறுப்புக்கொடி போராட்டத்தின்போது விவசாயிகள் மீது கார் ஏற்றி நான்கு பேர் உயிரிழந்தனர். பின்னர் ஏற்பட்ட வன்முறையில், ஒரு செய்தியாளர், பாஜக பிரமுகர்கள் உள்பட மேலும் நால்வர் உயிரிழக்க மொத்தம் எட்டு பேர் மரணமடைந்தனர்.
    லக்கிம்பூர் கெரி வன்முறை, Lakhimpur kheri Violence
    லக்கிம்பூர் கெரி வன்முறை
  • அக்டோபர் 9 - அந்தக் கார் மத்திய உள் துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இருந்த கார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

14. திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள்

நவம்பர் 19 - விவசாயிகளுக்கு எதிரானது எனக் குற்றச்சாட்டு எழுந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

நவம்பர் 29 - நாடாளுமன்றத்தில் அச்சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டது, Three Farm law withdrawn
வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன

டிசம்பர் 1 - அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்த நிலையில் அது சட்டமானது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை விடுத்து, வீடு திரும்பிவிட்டனர்.

15. நாகலாந்தில் பாதுகாப்புப் படையினரால் 14 அப்பாவிகள் கொலை

டிசம்பர் 5 - நாகலாந்து மோன் (Mon) மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டு, மேலும் 11 பேர் காயமடைந்தனர். நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் வேன் மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஓட்டிங் - டிரு என்னும் கிராமங்களுக்கு இடையே இச்சம்பவம் நடந்துள்ளது.

டிசம்பர் 6 - இந்தக் கொடூர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் பொதுமக்கள் என அடையாளம் தெரியாமல் பயங்கரவாதிகள் என்று நினைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது தொடர்பான விரிவான விளக்கமும் அளித்தார். இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

16. ஆந்திராவின் மூன்று தலைநகர் முடிவு வாபஸ்

  • நவம்பர் 22 - ஆந்திராவில் மூன்று தலைநகர் திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
  • ஜெகன் மோகன் ரெட்டி 2019இல் ஆந்திராவின் தலைநகர்களாக விசாகப்பட்டினம் (நிர்வாகம்), அமராவதி (சட்டப்பேரவை), கர்னூல் (நீதித் துறை) என மூன்றாகப் பிரித்து அறிவித்த நிலையில், அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்ப இம்முடிவு எடுக்கப்பட்டது.

17. எம்.பி.க்கள் இடைநீக்கம்

  • நவம்பர் 30 - மாநிலங்களவையில் அத்துமீறி நடந்துகொண்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
    நாடாளுமன்ற அவை
    நாடாளுமன்ற அவை
  • டிசம்பர் 21 - தேர்தல் சட்டத் திருத்த மசோதா 2021 பற்றிய விவாதத்தின்போது, மாநிலங்களவையின் விதிமுறை புத்தகத்தைத் தூக்கி எறிந்ததற்காக திருணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

18. இந்தியாவில் ஒமைக்ரான்

  • டிசம்பர் 2 - இந்தியாவில் முதல்முறையாக ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பதிவானதாக அரசு அறிவித்தது.
    இந்தியாவில் ஒமைக்ரான், Omicron in India
    இந்தியாவில் ஒமைக்ரான்
  • டிசம்பர் 29 - இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 961ஆக உயர்வு (ஆயிரத்தைத் தொடும் என அச்சம்).

19. புதின் வருகை

  • டிசம்பர் 6 - இந்தியா - ரஷ்யா இடையேயான மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்துகொண்டார். மேலும், இரு நாட்டுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான மாநாட்டில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • அதில், இருநாடுகளும் இணைந்து இந்தோ - ரஷ்யா ரைபிள்ஸ் நிறுவனம் வாயிலாக உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதியில் ஏ.கே. 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனால், இந்திய ராணுவத்திற்கு ஆறு லட்சம் துப்பாக்கிகள் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

20. வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் புதிய வளாகம்

டிசம்பர் 13 - வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கோயிலின் புதிய வளாகத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார். காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ. 339 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்ட வளாகங்கள் திறக்கப்பட்டன.

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் திறப்பு, Kasi Vishwanath Temple
காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் திறப்பு

21. தேர்தல் சீர்திருத்தச் சட்ட மசோதா

தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவுசெய்திருப்பது ஆகும். இதைத் தடுக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

டிசம்பர் 20 - தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

டிசம்பர் 21 - இந்தச் சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: 2021 RECAP : முக்கிய அரசியல் நிகழ்வுகள் ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.