ETV Bharat / bharat

5 மாநிலத் தேர்தல்.. காய்நகர்த்தும் காங்கிரஸ்.. சோனியா தலைமையில் ஆலோசனை!

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் 2022இல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொதுச்செயலாளர்கள், 5 மாநில பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Sonia Gandhi
Sonia Gandhi
author img

By

Published : Oct 26, 2021, 9:15 AM IST

டெல்லி : தேசிய தலைநகரில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் 5 மாநிலத் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை (அக்.26) நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

5 மாநில தேர்தல்- சோனியா காந்தி ஆலோசனை

இந்தக் கூட்டத்தில் 5 மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலன் சார்ந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. அந்த வகையில், 5 மாநிலங்களில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நவம்பர் 1ஆம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக கடந்த 16ஆம் தேதி காங்கிரஸ் நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

கண்டிப்பு

அப்போது மூத்தத் தலைவர்களின் அதிருப்தி கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சோனியா காந்தி, “நானே கட்சியின் முழு நேரத் தலைவர். கட்சி நிர்வாகிகள் தங்களின் கோரிக்கைகளை ஊடகத்திடம் பேசுவதை விட என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம்” என்று கூறி கண்டித்தார்.

மேலும் இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளான இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், இந்திய தேசிய மாணவர் அமைப்பு (NSUI – National Student Union of India) மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள நிர்வாக அமைப்பு, கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றின.

ராகுல் காந்திக்கு ஆதரவு

முன்னதாக இதே கோரிக்கையை ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கர் முதலமைச்சர்களான அசோக் கெலாட், சரண்ஜித் சிங் சன்னி, பூபேஷ் பாகல் ஆகியோர் வலியுறுத்தினர்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “ராகுல் காந்தி இந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்” என்றார்.

பஞ்சாப்பில் பனிப்போர்

காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் அடுத்தாண்டு (2022) செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையில் சிக்கித் தவித்துவருகிறது.

மாநிலத்தின் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே நடந்த பனிப்போரில் முதலமைச்சர் பதவியை துறந்தார் கேப்டன் அமரீந்தர் சிங். அதன்பின்னர் மாநிலத்தின் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். அவரின் அமைச்சரவையில் கேப்டன் அமரீந்தர் சிங் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்துவும் அதிருப்தியில் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : அதிரும் உ.பி., 'வாரணாசி டூ ரேபரேலி'.. பிரியங்கா காந்தி யாத்திரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.