கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தில், விஜயாநகர் பகுதியைச் சேர்ந்தவர், சீனிவாஷ். இவர் சுமார் 15 ஆண்டுகளாக உதவி தோட்டக்கலை அலுவலராக வேலை பார்த்து வந்து, தற்போது, ஓய்வு பெற்றுவிட்டார்.
அதன்பின் தனது வீட்டின் அருகே ஒரு மா மரத்தை நட்டு வைத்துள்ளார். இவர் பல இடங்கள் பயணம் செய்து வீடு திரும்புகையில், செல்லும் இடங்களில் இருந்து விதவிதமான மாமரக் கன்றுகளைக் கொண்டு வந்து, ஒரே மரத்தில் சேர்த்து, ஒட்டி, பதியம்போட்டு வளர்த்துள்ளார். சீனிவாஷின் 16 வருட உழைப்புக்கு, தற்போது பலன் கிடைத்துள்ளது.
தற்போது, அந்த ஒரே மரத்தில் 20 வகையான மாம்பழங்கள் உருவாகியுள்ளன.
இதுகுறித்து, சீனிவாஷ் கூறுகையில், 'ரத்னகிரி, டோட்டாபுரி, பைகன், மல்லிகா ஆகிய இடங்களில் உள்ள மா மரங்களின் கிளைகளைக் கொண்டு வந்து, நட்டு வைத்து, புதிய முயற்சியில் ஈடுபட்டேன்.
இரவும் பகலுமாக மா மரத்தைப் பாதுகாத்து வளர்த்து வந்தேன். தான் இதுவரைக்கும் பட்ட கஷ்டத்திற்குக் கிடைத்த பலன் தான், இந்த 20 வகையான மாம்பழங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மாற்று சிகிச்சைக்காக மா கிளைகளைக் கொண்டு வருவேன். இப்போது ஒரே மா மரத்தில் நிறைய பழங்கள் உள்ளன.
இந்தப் பழங்களை அண்டை வீட்டாருக்கும் தருகிறேன். என்னைப் போல நடவு செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்' என்று கூறினார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்