தெற்கு நேபாளத்தின் பரா மாவட்டத்திலுள்ள எஃகு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பிகாரைச் சேர்ந்த பிரதீப் கோத் (40), ராம்நாத் மஹதோ (45) எனத் தெரியவந்ததுள்ளது.
ஜகதாம்சா எஃகு தொழிற்சாலையில் நேற்று (ஜூன் 19) மாலை ஆயில் டேங்க் வெடித்ததைத் தொடர்ந்து இத்தீவிபத்து தொடங்கியது.
மருத்துவமனையில் சிகிச்சை
இதுகுறித்து தொழிலாளர்கள் சங்க செயலாளர் தீபக் கார்கி செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆயில் டேங்க் வெடித்த போது தொழிலாளர்கள் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர், அப்போது சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிடித்தது என்றார். மேலும் இவ்விபத்தில் மூன்று நபர்கள் தீக்காயங்களுக்குள்ளாகி தெராய் சிமாரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, தொழிற்சாலையில் விபத்து நடந்த சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.