ETV Bharat / bharat

புதுச்சேரியில் வீட்டின் மீது அறுந்து விழுந்த மின் கம்பி; 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

புதுச்சேரியில் வீட்டின் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில், 2 உயிரிழந்தனர்.

மின் கம்பி
மின் கம்பி
author img

By

Published : Jun 21, 2022, 10:38 AM IST

புதுச்சேரி: முத்தியால்பேட்டை கீழ் அக்ரகாரம் பகுதியில் சுமார் 100-க்கும் மேலான சிமெண்ட் சீட்டுகள் கூரை வேயப்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீட்டின் அருகிலேயே மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த மின் கம்பத்தில் இருந்து நேற்று (ஜூன்20) திடீரென்று மின் வயர் ஒன்று ஒரு வீட்டின் ஓட்டின் மீது அறுந்து விழுந்தது. இதனால் வீட்டிலிருந்த தேன்மொழி, சரண்யா, செல்வி, மற்றும் கணேசன், ஆகிய 4 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: ரோட்டில் வாகனங்களுக்கு இடையூறாய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.