டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு நோக்கி நேற்று (ஜூன் 11) 11.55 மணியளவில் புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையறிந்த விமானி மீண்டும் டெல்லிக்கு விமானத்தை திருப்பினார். அந்த வகையில் விமானம் மதியம் 1.45 மணியளவில் டெல்லி வந்தடைந்தது.
இதையடுத்து தொழில்நுட்பக் கோளறுகளை சரிசெய்யும் பணிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து மற்றொரு ஏர் ஏசியா விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விமானம் 3:30 மணியளவில் ஸ்ரீநகர் நோக்கிய புறப்பட்டது. ஆனால் இந்த விமானத்திலும் புறப்பட்ட அரை மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
ஆகவே, இந்த விமானமும் டெல்லிக்கே திரும்பியது. அப்படி 5.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக வந்தடைந்தது. இதனால் குழப்பமடைந்த விமான நிறுவனம் பயணிகளிடம், உங்களது பயணத்தை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற்றுகொள்ளலாம் அல்லது அடுத்த 30 நாள்களுக்குள் மற்றொரு பயணத்திற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசம் வன்முறை: முக்கிய புள்ளிகளின் வீடுகள் இடிப்பு