ETV Bharat / bharat

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - இந்தியத் தேர்தல் ஆணையம்

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என இந்தியத்தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - இந்திய தேர்தல் ஆணையம்

author img

By

Published : Jul 28, 2022, 4:50 PM IST

இந்தியாவில் வாக்களிக்கத்தகுதியான வயது 18ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு 18 வயது நிரம்பிய பின் மட்டுமே வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இது சில சமயங்களில் விண்ணப்பித்தும் வாக்காளர் அட்டை கிடைக்க தாமதம் ஆவதால் விண்ணப்பித்தவர்களால் உடனே நடக்கக் கூடிய தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை இருந்துவந்தது.

இதனடிப்படையில் முன்பு வாக்களிக்கத்தகுதியான 18 வயது நிரம்பியோர், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். ஆனால் இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18 வயது நிரம்பும் வரை காத்திருக்கத்தேவையில்லை எனவும் கூறியுள்ளது.

அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் அதுசார்ந்த அலுவலர்களும் இதுகுறித்து தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இணைந்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நான்கு முறை முகாம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 4 லட்சம் பேர் விண்ணப்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.