ETV Bharat / bharat

கர்நாடகாவில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2200க்கு விற்பனை; ஒரு கிலோ ரூ.147

தக்காளியின் தேவை அதிகமாகவும், வரத்து குறைவாகவும் உள்ள நிலையில், கர்நாடகாவில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2200க்கு விற்பனையாகியுள்ளது.

Karnataka
கர்நாடகா
author img

By

Published : Jul 12, 2023, 12:31 PM IST

Updated : Jul 12, 2023, 2:16 PM IST

கோலார்(கர்நாடகா): கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை தினமும் அதிகரித்த வண்னம் உள்ளது. ஏனென்றால் தக்காளி இல்லாமல் சமைக்கவே முடியாது என்ற கட்டாயம் இருந்து வருகிறது. ஆகையால் தான் தக்காளி 'சமையலறையின் ராணி' என அழைக்கப்படுகிறது. தக்காளிக்கு தற்போது அதிக கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 11 செவ்வாய்கிழமை) கோலாரில் உள்ள வேளாண்மை விளைபொருள் சந்தைக் குழுவில் (ஏபிஎம்சி) 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2,200-க்கு ஏலம் விடப்பட்டு சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

கோலாரில் உள்ள ஏபிஎம்சி சந்தை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சந்தையாகும். மேலும் இந்தியா முழுவதிலும் இருந்து வியாபாரிகள், காய்கறிகளை வாங்க இங்கு வந்து செல்வது வழக்கம். சமீபகாலமாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஜகூர் கிராமத்தைச் சேர்ந்தவர், வெங்கடரமணன். இவர் சுமார் 15 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டியை ரூ.2,200க்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், வெங்கடரமணன், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளியைப் பயிரிட்டுள்ளார். அதை ஏபிஎம்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து பெரும் இலாபம் ஈட்டியுள்ளார். மொத்தம் 36 பெட்டிகளை ஏலம் விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் உள்ள கோலார் மற்றும் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி விளையும் எனக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் தக்காளி சாகுபடிக்கு சாதகமான காலநிலையாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தினமும் ரூ.100 முதல் 200 வரை அதிகரித்து வருவதாக கோலார் ஏபிஎம்சி பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய தக்காளி விலை உயர்வு இன்று வரை தொடர்கிறது. மேலும் டெல்லி, மகாராஷ்டிராவின் நாசிக், குஜராத், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிக்கு அதிக தேவை இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கோலார் பகுதியில் ஒரு குறிப்பிட்ட வகை நோய் தாக்கி தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் அதிக அளவில் தக்காளியைப் பயிரிட்டு வளர்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் வட இந்தியாவில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தேவை அதிகமாக இருப்பதாலும், பல்வேறு காரணத்தால் வரத்து குறைந்ததாலும் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: GST Council Meeting: புற்றுநோய் மருந்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

Last Updated : Jul 12, 2023, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.