ETV Bharat / bharat

சீனாவின் உலக சாதனையை 50 நிமிடங்களில் முறியடித்த பள்ளி மாணவர்கள் - 0 நிமிடத்தில் அக்ரோ ரோபோவை உருவாக்கி கின்னஸ் சாதனை

போபாலில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 9ஆம் வரை படிக்கும் 1484 மாணவர்கள் சேர்ந்து சுமார் 50 நிமிடங்களில் அக்ரோ ரோபோவை உருவாக்கி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.

break Hongkong's Guinness World Record
சீனாவின் உலக சாதனையை முறியடித்த பள்ளி மாணவர்கள்
author img

By

Published : Jan 24, 2023, 4:01 PM IST

மத்தியப் பிரதேசம்: போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (MANIT) நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் மொத்தம் 1,600 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 1,484 மாணவர்களின் விடாமுயற்சியே இந்த வெற்றி சாதனைக்கு வழிவகுத்துள்ளது.

விக்யான் பாரதியின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த மயூரி தத் கூறுகையில், "இதற்கு முன்பு இந்த சாதனையை சீனாவில் ஹாங்காங் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போதைய முயற்சியில், இன்று நான்கு வெவ்வேறு வகை ரோபோக்கள் தயாரிக்கப்பட்டன.

முதல் வகை ரோபோ விதைகளை மண்ணில் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இரண்டாவது வகை ரோபோக்கள் ஒரு பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி விதைகளுக்கு நீர்ப்பாசனம் செய்கின்றன. மூன்றாவது வகை ரோபோக்கள் நீர்ப்பாசன செயல்முறைக்குப் பிறகு மண்ணை சமன் செய்வதற்காக உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் நான்காவது வகை ரோபோக்கள் மண்ணைத் தோண்டி எடுக்கின்றன. இந்த முயற்சியில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்" எனக் கூறினார்.

மாணவர்கள் கூறுகையில், "உலக சாதனை முயற்சியில் ரோபோக்களை உருவாக்கியதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், ரோபோக்களை உருவாக்க அதிக நேரமும், முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், இது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது" எனத் தெரிவித்தனர். மேலும், தங்கள் குழந்தைகள் சீனாவால் பதிவு செய்யப்பட்ட உலக சாதனையை முறியடித்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக வழிகாட்டிகளும், பெற்றோர்களும் தெரிவித்தனர்.

கின்னஸ் உலக சாதனைத் தீர்ப்பாளர் ரிஷி நாத் கூறுகையில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் விவசாயம் சார்ந்த முயற்சிகளில் கவனம் செலுத்தத் தூண்டியுள்ளனர் எனக் கூறினார்.

பின்னர் மத்தியப் பிரதேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் சக்லேச்சாவை, தத் பாராட்டினார். மேலும் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கோயில் யானைக்காக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.