ETV Bharat / bharat

பிறந்தநாள் தினத்தன்று 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு - கர்நாடகா சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு

கர்நாடகாவில் பிறந்தநாள் தினத்தன்று 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14-year-old girl gang-raped on her birthday in Karnataka, 4 held

author img

By

Published : Feb 21, 2022, 12:44 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பிறந்தநாள் தினத்தன்று 14 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், நேற்று(பிப்.20) சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்ப பேருந்தில் ஏறினார்.

இந்த பேருந்திலிருந்த நான்கு பேர் சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று விரும்பிய உணவு பண்டங்களை வாங்கிகொடுத்தனர். இதையடுத்து சிறுமியை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துசென்று கூட்டுபாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர்.

சிறுமியின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் காவலர்கள் சிறுமியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூருவில் 23 வயது மாணவி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.