வதோதரா : குஜராத் மாநிலம் வதோதராவுக்கு பள்ளி மாணவர்கள் அடங்கிய குழு சுற்றுலா சென்று உள்ளது. வதோதரா புறநகரில் பகுதியில் உள்ள ஏரியில் மாணவர்கள் குழு படகு சவாரியில் ஈடுபட்டு உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோர விபத்தில் படகில் பயணித்த மாணவர்கள், ஆசிரியர் என 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 27 பேர் படகில் பயணித்ததாக கூறப்படும் நிலையில் தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் தண்ணீரில் தத்தளிக்கும் மீதமுள்ள மாணவர்களை தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து அறிந்த குஜராத் கல்வி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிக்னிக் வந்த நிலையில், மாணவர்களுக்கு இந்த கதி நிகழ்ந்து உள்ளதாகவும், ஹரினி ஏரியில் தத்தளிக்கும் மாணவர்களை மீட்கு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி. கோர் தெரிவித்து உள்ளார். அதேநேரம் தண்ணீரில் தத்தளித்த சில சிறுவர்களை அக்கம் பக்கத்து கிராம மக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஆதார் வைச்சு இனி இந்த வேலைகள முடிக்க முடியாது? போச்சுடா!