ETV Bharat / bharat

மேற்குவங்கத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு! - இடி மின்னலுடன் கனமழை

மேற்கு வங்க மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல்
lightning
author img

By

Published : Apr 28, 2023, 7:01 PM IST

கொல்கத்தா: கோடை காலத்தின் உச்சமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. எனினும் ஒருசில மாநிலங்களில் கோடை மழை பெய்து வருகிறது. மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (ஏப்ரல் 27) மழை பெய்தது.

குறிப்பாக புர்பா பர்தாமன், முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானாஸ், பாஷியம் மிட்னாபூர், ஹவுரா ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் 5 மாவட்டங்களிலும் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

இதில் பெரும்பாலோர் விளைநிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த போது, மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "புர்பா பர்தாமன் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தலா இருவரும் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். பாஷியம் மிட்னாபூர், ஹவுரா மாவட்டங்களில் தலா மூவர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர்" என கூறினர்.

மேற்குவங்க மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு முயற்சி - வழக்கறிஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.