இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்தில் பயிற்சி நிலையத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களது ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் மோதி விபத்து ஏற்பட்டதில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
சியாச்சினில் 50 டிகிரி செல்சியஸ் குளிரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களிடையே இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடும் குளிர் காரணமாக, பெல்ஜங் குருங் என்ற ராணுவ வீரரின் உடலானது முகாமுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. கர்ப்பிணியான அவரின் மனைவி இதனால் குருங்கின் முகத்தை பார்க்க முடியவில்லை. லோக்ராஜ் குருங், தனது மகன் பெல்ஜங் குருங்கின் இறுதிச் சடங்குக்கு பல ஏற்பாடுகளை செய்திருந்தார். உடல் எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.