ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 280 மாவட்ட கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 43 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது.
முன்னதாக 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 51.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள சூரன்கோட் பகுதியில் 135 வயது மதிக்கத்தக்க லால் ஷேக் என்ற மூதாட்டி வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
இதையும் படிங்க: தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்: மெளனம் கலைத்த அண்ணா ஹசாரே