ETV Bharat / bharat

மணிப்பூரில் பிரிவினைவாத குழுக்களிடையே துப்பாக்கிச் சூடு - 13 பேர் பலி! - மணிப்பூரில் பிரிவினை கும்பலிடையே துப்பாக்கிச் சூடு

மணிப்பூரில் இரண்டு பிரிவினை குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட துபபக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Manipur
Manipur
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 6:19 PM IST

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் தென்னுப்பால் மாவட்டத்தில் இரண்டு பிரிவினை குழுக்ககளுக்கு இடை துப்பாக்கிச் சூடு நடைபெற்று உள்ளது. ஒரு தரப்பினர் லெய்து கிராமம் வழியாக மியான்மர் நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில், மறைந்து இருந்து மற்றொரு பிரிவினைவாத குழு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இரு தரப்பினர் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரும் உள்ளூர் மக்கள் இல்லை என்பது தெரியவந்து உள்ளதாகவும் மியான்மர் அருகில் தென்னுப்பால் மாவட்டம் உள்ளதால் இது போன்று அடிக்கடி சட்டவிரோத இடம் பெயர்வுகள் நடைபெறுவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ இடத்தில் கிடந்த 13 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக பாதுகாப்பு படையினர் மருத்துவமனை அனுப்பி உள்ளனர். உயிரிழந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், என்ன காரணத்திற்காக எல்லை தாண்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றும் விசாரணை நடத்தி வருவதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : மிசோரமில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சோரம் மக்கள் இயக்கம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.