டெல்லி :17ஆவது நாடாளுமன்றத்தின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை (ஆக.9) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவினருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் 127ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதா ஓபிசி இனக் குழுக்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மசோதா இன்று (ஆக.10) மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா தொடர்பான அறிக்கையில் அமைச்சர் வீரேந்திர குமார், “மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமூகத்தில் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் பட்டியலைத் தயாரித்து பராமரிக்க அதிகாரம் பெற்றவை ஆகும்” எனக் கூறியிருந்தார்.
மேலும், “இந்த நாடு, சட்டப்பிரிவு 342A ஐ திருத்த வேண்டும் மற்றும் அரசியலமைப்பின் 338B மற்றும் 366ஆவது பிரிவுகளில் அதன் திருத்தங்களை செய்ய வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு 102ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 338பி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கட்டமைப்பு, கடமைகள் மற்றும் அதிகாரங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதியை ஒரு சமூகத்தில் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியதாக (SEBC) அறிவிக்கும் அதிகாரங்களைக் கையாளும் 342A ஆகியவற்றைச் சேர்த்தது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : எதிர்க்கட்சிகள் ஆதரவு - '127ஆவது சட்டதிருத்த மசோதா' என்றால் என்ன?