ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் டோனபாண்டா சோதனைச் சாவடியில் காவல் துறையினர் அவ்வழியாக வரும் வாகனங்களைச் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு கார்கள் மீது காஞ்சிகாச்செர்லா காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவற்றை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் இரண்டு கார்களிலும் 120 கிலோ கஞ்சா இருந்ததும், அவற்றை விசாகப்பட்டினத்திலிருந்து, மும்பை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக கார்களிலிருந்து நான்கு பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளிகள் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை செயலி மூலம் கண்காணிக்கும் ஆந்திரா!