ETV Bharat / bharat

ம,பி-யில் பாலியல் வன்புணர்வு; அரை நிர்வாண நிலையில் உதவி கோரிய சிறுமி! - பாஜக ஆளும் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம்

12 year old girl's rape in Madhya Pradesh: மத்தியப்பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில், அரை நிர்வாணமாக சாலையில் நடந்து சென்று ஒவ்வொருவரிடமும் உதவி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

12 year old girl was raped in madhya pradesh
ம,பி-யில் பாலியல் பலாத்காரம்; அரை நிர்வாண நிலையில் உதவி கோரிய சிறுமி!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 10:04 PM IST

உஜ்ஜைன் (மத்திய பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில், மஹாகல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பட்நகர் சாலையில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் அரை நிர்வாண நிலையில், காயங்களில் ரத்தம் வழிந்த நிலையில் போலீசாரால் கண்டறியப்பட்டார். அந்த சிறுமியை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக சரக் மருத்துவமனையில் அனுமதித்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு அனுப்பி வைத்தனர்.

  • #WATCH | Delhi: On Ujjain minor girl rape case, NCPCR chief Priyank Kanoongo said, "The incident has come to my knowledge...We are writing to DM regarding the condition of this girl and are asking for her medical report. We have also written to the SP and have asked for a copy of… pic.twitter.com/9UbnMEcfOY

    — ANI (@ANI) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து உஜ்ஜைன் எஸ்பி சச்சின் சர்மா கூறுகையில், “இந்தூரில் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், சிறுமியின் பிறப்புறுப்பு பாலியல் வன்புணர்வால் காயமடைந்து இருப்பதால் அந்த காயத்தில் இருந்து அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மருத்துவர்கள் சிறுமிக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த சிறுமி பேசுவதை வைத்து பார்க்கையில், அவர் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரக்யாராஜ் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதுகிறோம். சிறுமி சுயநினைவற்று இருப்பதால் அவருக்கு இந்த சம்பவம் எங்கு நடந்தது என விசாரிக்க முடியவில்லை.

சிசிடிவி காட்சிப் பதிவுகளில் சிறுமி நடந்து வந்த பகுதிகளை ஆராய்ந்தபோது, இந்தூரின் உள்வட்ட சாலையில் உள்ள சவ்ரா கேடி பகுதியில் வீட்டின் வெளியே நின்ற நபர் ஒருவரிடம் சிறுமி அரை நிர்வாண நிலையில் உதவி கேட்பதும், அதற்கு அந்த நபர் மறுப்பதும் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மத்தியப்பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், “சிறுமி விவகாரம் குறித்து மஹாகல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பு புலனாய்வு குழு (special investigation team) அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைந்து கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமிக்கு இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி உஜ்ஜைனுக்கு வெளியே ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவரால் சரியாக பதிலளிக்க முடியாததால் சம்பவம் குறித்து நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களின் உதவியுடன் சிறுமியிடம் பேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அவரது X சமூக வலைத்தளப் பக்கத்தில், “உஜ்ஜைனியில் சிறுமி மிகவும் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். 12 வயது சிறுமிக்கு எதிராக நடந்த கொடூரமான குற்றமும், அவர் சாலையில் மயங்கி விழுவதற்கு முன்பு அரை நிர்வாணமாக நகரின் பல பகுதிகளில் ஓடிய விதமும் மனித குலத்தை அவமானப்படுத்துகிறது” என பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அவரது X சமூக வலைத்தளத்தில், “2012 நிர்பயா வழக்கை விட இந்தச் சம்பவம் மிகவும் கொடூரமானது. மத்தியப்பிரதேசத்தில் தினமும் எட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கிறது. 12 வயது அப்பாவி சிறுமிக்கு நீதி வழங்க முடியாத பாஜக அரசுக்கு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க உரிமை இல்லை” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சேர்மன் பிரியங்க் கனூங்கோ, “இந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும், சிறுமியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கோரியுள்ளோம். முதல் தகவல் அறிக்கையின் நகல், சிறுமியின் வாக்குமூலத்தின் நகல் ஆகியவற்றை எஸ்பியிடம் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘திமுகவின் ஏஜெண்டாக செயல்படும் கர்நாடக முதலமைச்சர்’ - பாஜக, ஜேடிஎஸ் கூட்டணி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.