ஹைதராபாத்: 110 ஆண்டுகளை நிறைவு செய்து கலை உலகில் புதுமை படைத்து வரும் சினிமாவினை கொண்டாடும் வகையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஹைதராபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நேற்று (அக்.13) கோலாகலமாகத் துவங்கியுள்ளது. சினிமா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட அணிவகுப்பு என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது ராமோஜி ஃபிலிம் சிட்டி. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி, 46 நாட்களுக்கு நடக்கவிருக்கும் நிலையில் முதல் நாளான நேற்றே (அக்.12) இதனைக் காண மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த 110 வருட சினிமா பயணத்தின் கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில், அடுத்த 46 நாட்கள் பார்வையாளர்களின் மழையில் நனைந்திருக்கும். முதல் நாளிலேயே எதிர்பாராத வகையில் ஏராளமானோர் வருகை தந்து சிறப்பித்தனர். இந்தக் கொண்டாட்டங்கள் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை அதிகரித்துள்ளது. இந்த திருவிழாவிற்காக பல்வேறு வண்ண அலங்காரங்கள், வண்ண விளக்குகள், சினிமா ரசிகர்களின் ஏக்கங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் நடிகர்களின் படங்கள் எனப் பார்வையாளர்களின் மனம்கவரும் வகையில் வரவேற்கும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
பார்வையாளர்களை உற்சாகப்படுத்த ஏராளமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் என இந்த கொண்டாட்டத்திற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தக் கொண்டாட்டத்தில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் உள்ளதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கார்னிவல் மற்றும் அணிவகுப்பில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, சினிமாவின் வசிகரம் நிறைந்த அமைதியான இயற்கை அழகை வெளிப்படுத்தும் மற்றொரு உலகைக் காண்பிக்க, தனது பார்வையாளர்களுக்கு இந்த முறையும் ராமோஜி ஃபிலிம் சிட்டி முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்றும் அறிவித்துள்ளது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியா உள்ளிட்ட நாட்டின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள், ராமோஜி பிலிம் சிட்டியுடன் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளனர். ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வரும் குழந்தைகள் பறவை பூங்கா, நீர்வீழ்ச்சிகள், ராட்சத சக்கரங்கள், மின்சார ரயில்கள் மற்றும் குதிரைகளில் சவாரி செய்வதைப் பார்த்து வியப்படைவது குறிப்பிடத்தக்கது.
மின்னும் மின் விளக்குகள் பார்வையாளர்களின் கண்ணைக் கவரும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் இணைவதற்குப் பார்வையாளர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். சினிமா கொண்டாட்டம் திருவிழா வரும் நவம்பர் 26-ம் தேதி வரை தொடரும் நிலையில், இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ராமோஜி பிலிம் சிட்டி ஆணையம் பல்வேறு பரிசுகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: கடல் அலை, காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க புதிய இயந்திரம் - ஐஐடி மாணவர் கண்டுபிடிப்பு!