ETV Bharat / bharat

டேட்டிங் ஆப் மோசடி - ரூ.11 லட்சத்தைப் பறிகொடுத்த 77 வயது முதியவர்

டேட்டிங் செயலியில் 77 வயது முதியவர் ஒருவர் 11 லட்சம் ரூபாய் பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டிங் மோசடி
டேட்டிங் மோசடி
author img

By

Published : Jul 21, 2021, 9:23 PM IST

நாட்டில் தற்போது டேட்டிங் செயலி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் இணையத்தில் தங்களது நேரத்தைச் செலவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவதுபோல் பலரும் டேட்டிங் செயலியை விரும்பத் தொடங்கிவிட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் பெயரிலும், பெண்கள் சிலர் ஆண்கள் பெயரிலும் போலிக் கணக்குகள் தொடங்கி மோசடி செய்து வருகின்றனர்.

போலி நபரிடம் காதலில் விழுந்த 77 வயது தாத்தா

அந்தவகையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 77 வயது முதியவர் ஒருவரிடம் சிலர், பெண் பெயரில் கணக்குத் தொடங்கி ஷேட்டிங்கில் பேசியுள்ளனர். இதனை அறியாத அவர் பெண் என நம்பி பேசி, காதலில் விழுந்துள்ளர்.

இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த மோசடி கும்பல் அவரிடமிருந்து சுமார் 11 லட்சம் வரை வாங்கியுள்ளனர். மேலும் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்க 77 வயது முதியவருக்கு இதுதொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக இதுதொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் இணைய மோசடி தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹேக்கர்களிடமிருந்து விலகியே இருங்கள் - சைபர் கிரைம் தரும் அறிவுரைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.