பெங்களூரு (கர்நாடகம்): மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மாயி அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என உத்தரவிட்டார்.
இது ஒரு விழுகாடுக்கும் குறைவாக தொற்று உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் என தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும் 1 முதல் 2 விழுக்காடு வரை கரோனா தொற்று கொண்ட மாவட்டங்களில், 50 விழுக்காடு பார்வையாளர்களை மட்டும் வைத்து திரைப்படங்கள் திரையிடலாம் என அரசு அறிவித்துள்ளது.
இரண்டு விழுக்காட்டிற்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை எனவும் அரசு தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், திரையரங்கு வரும் பார்வையாளர்கள் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியாவது செலுத்தியிருக்கவேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு 100 விழுக்காடு வருகையுடன் பள்ளிகளை திறக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமலில் உள்ள இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை உள்ள ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தடுப்பூசி போட்டாதான் ஹோட்டல்களில் சோறு'