எட்டாவா (உத்தரப் பிரதேசம்): லக்னா தேவி கோயிலுக்கு பக்தர்கள் சரக்கு வாகனத்தில் சென்றனர். இந்நிலையில், அந்த சரக்கு வாகனமானது, அதிக பாரம் மற்றும் அதிவேகம் காரணமாக 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.
இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து எஸ்எஸ்பி பிரஜேஷ் குமார் சிங் கூறுகையில், “இந்தத் துயரச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 36க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர். இவர்கள் லக்னா தேவி கோயிலுக்கு சென்று திரும்பியவர்கள். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டு, உடற்கூராய்வுக்கு பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.