இது பற்றி அவர் உருளையன்பேட்டை காவல் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”புதுச்சேரியில் தேர்தலையொட்டி, 23 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணப்பரிமாற்றம், மதுக்கடத்தல் போன்றவற்றை தடுக்க காவல் துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. தற்போது புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றமிழைக்கும் ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும், தேர்தலையொட்டி மாநிலத்தின் எல்லைகளில் 10 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார். அப்போது வடக்கு காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஊடக மையம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு