இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 154 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 84 லட்சத்து 41 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில், அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 2) ஒரேநாளில் 25 ஆயிரத்து 317 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும். அடுத்தப்படியாக கேரளா மாநிலம் உள்ளது. அங்கு, 19 ஆயிரத்து 661 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நேற்று (ஜூன் 2) 2,887 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 63 லட்சத்து 90 ஆயிரத்து 584 ஆக உள்ளது. தற்போது 17 லட்சத்து 13 ஆயிரத்து 413 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதுவரை, மொத்தமாக 22 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரத்து 693 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.