ETV Bharat / snippets

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 3 முதியவர்கள் போக்சோவில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 6:59 PM IST

கைது செய்யப்பட்ட முதியவர்கள்
கைது செய்யப்பட்ட முதியவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். பின்னர் வேலைக்குச் சென்ற சிறுமியின் தாய் வீட்டுக்கு வந்துபோது, அக்கம்பக்கத்தினர் வீட்டில் கூட்டமாக இருந்ததாகவும், சிறுமியை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதனை அடுத்து, சிறுமியை அவரது தாய் அழைத்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் பாலியல் சீண்டல் அளித்ததாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் இச்சம்பவம் குறித்து 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த ராஜேந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் சின்னத்தம்பி ஆகிய மூன்று பேரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.