ETV Bharat / snippets

திருச்சியில் மூடப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு இதுதான் ஒரே வழி.. செல்வப்பெருந்தகை கூறியது என்ன?

செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு
செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 6:56 PM IST

சென்னை: சிவாஜி கணேசன் 23ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, "நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சர்மா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதில் ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம். மக்களின் சுமையை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். திருச்சியில் மூடப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை முதலமைச்சருடன் பேசி மூன்று மாதத்தில் வேறு இடத்தில் திறக்கப்படும்" என்று அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.