ETV Bharat / snippets

கிளாம்பாக்கம் அருகே கடைக்குள் புகுந்த ஆம்னி பேருந்து; உயிர் தப்பிய பயணிகள்!

விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து (Image Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 2:26 PM IST

சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் அருகே நள்ளிரவில் அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கடைக்குள் புகுந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு, தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. வார விடுமுறையை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு நீலகிரிக்கு சுமார் 35க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது.

பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஐயஞ்சேரி சாலையில் அதிவேகமாகச் சென்றபோது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் ஆம்னி பேருந்து மோதி, அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.