சென்னை: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அரிசன் காலனி என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் என ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்னும் பெயரை அகற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு அளித்துள்ளார்.
எனவே இனி அந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றுள்ளதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி, இதற்காக போராடிய கணேசனுக்கு பொன்னாடை அணிவித்தார்.
சமத்துவச் சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவர் திரு. கணேசன் - வழக்கறிஞர் திரு. அன்பழகன் போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள்! https://t.co/2PVXsNGZjP
— M.K.Stalin (@mkstalin) November 25, 2024
மேலும் இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் அன்பழகனிடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் அமைச்சர். இதையடுத்து திடீரென மல்லசமுத்திரம் கிராமத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வருகை தந்தார்.
இதையும் படிங்க: “ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்ல”.. தனியார் பள்ளியிடமிருந்து மகனின் டிசியை பெற்ற தர கலெக்டரிடம் தந்தை மனு!
அவரை பார்க்க ஊர்மக்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கூடிய நிலையில் அமைச்சர் பள்ளி பலகையில் எழுதப்பட்டிருந்த அரிசன் காலனி என்னும் பெயரை கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பெயர் மாற்றம் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்னும் கருணநிதியின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்