ஆவடி அருகே இளைஞர் மீது ஏறி இறங்கிய மினி லாரி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - Avadi Lorry accident
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-03-2024/640-480-20917436-thumbnail-16x9-tut.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 6, 2024, 1:25 PM IST
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் முரளி (28) தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் இவர், அதே பகுதியில் 5 வருடமாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள மதுக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, சோழம்பேடு சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக தண்ணீர் ஏற்றிச் சென்ற மினி தண்ணீர் லாரி ஒன்று இடித்ததில் கீழே விழுந்த அவர் மீது அதே வாகனம் ஏறி இறங்கியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ரஜினி (38) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.