“யாரை பார்த்து அறிவு கெட்டவன்னு சொல்ற?”.. அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் பெண் கடும் வாக்குவாதம்! - GOVERNMENT BUS LADY FIGHT - GOVERNMENT BUS LADY FIGHT

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 4:19 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அரசுப் பேருந்து ஒன்று தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த அரசுப் பேருந்தை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி முந்திச் செல்ல முயற்சி செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், அதைப் பார்த்த அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த கணவரை அறிவு கெட்டவன் எனத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்ட இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மனைவி ஆத்திரமடைந்து, பேருந்தின் முன் வழிமறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

பின் பேருந்தில் ஏறி ஓட்டுநர் மற்றும் நடந்துநரிடம், “யாரை பார்த்து அறிவு கெட்டவன் என கூறினீர்கள், எனது கணவர் எம்.எஸ்.சி. முடித்த ஒரு போஸ்ட் கிராஜுவேட். நீங்கள் அரசுப் பேருந்தை இயக்கி வந்தால் நீங்கள் தான் அரசாங்கம் என நினைத்து விட்டீர்களா? அனைவரையும் மரியதையுடன் நடத்துங்கள்” என வாக்குவதத்தில் இறங்கியுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி போக்குவரத்து காவலர், பெண்ணை சமாதனம் செய்து பின் பேருந்து நடத்துநர் மன்னிப்பு கேட்டபின் அங்கிருந்து சென்றுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.