நீலகிரி: சிறுத்தை குட்டிகள் தோற்றத்தில் கொஞ்சி விளையாடிய காட்டு பூனைகள்! - WILD CAT ENTERS COONOOR RESIDENCE
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-10-2024/640-480-22743284-thumbnail-16x9-leo.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 23, 2024, 3:55 PM IST
நீலகிரி: குன்னூரில் சப்ளை டிப்போக்கு செல்லும் வழியில் இருக்கும் ராணுவ சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்த புதர் மண்டிய இடத்தில் சிறுத்தை போன்று காட்சியளிக்கும் விலங்கு ஒன்று தனது 3 குட்டிகளுடன் விளையாடி கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கூட்டமாக திரண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆரம்பித்தால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டார். அதில் குடியிருப்புக்குள் உள்ள சிறுத்தை போன்ற விலங்கு காட்டுப் பூனை என கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த காட்டுப் பூனைகள் அருகே சென்று படம் பிடிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுரை கூறியதை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். பின் அந்த காட்டு பூனைகளை மீட்டு அங்குள்ள வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர். இந்த வீடியோவை சிலர் சிறுத்தை குட்டிகள் என தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் அதனை செய்ய வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.