ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவி கௌஷிகா! - Asian squash medalist Kaushika - ASIAN SQUASH MEDALIST KAUSHIKA
🎬 Watch Now: Feature Video
Published : Jul 2, 2024, 10:37 AM IST
தூத்துக்குடி: பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் ஆசிய அளவிலான 31வது ஏசியன் ஜூனியர் ஒற்றையர் சம்பியன்ஷிப் - 2024 ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதில், 13 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்திய அணி சார்பில் தூத்துக்குடி அழகர் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கௌஷிகா முனியராஜு கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி கௌஷிகாவிற்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சென்னையில் இருந்து ரயில் மூலம் தூத்துக்குடி ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். அப்போது, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவி கௌஷிகாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாதனை புரிந்த மாணவி கௌஷிகாவிற்கு தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம், கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் உரிமையாளர் ரைபின் தார்சியஸ் மற்றும் விஸ்வ பாரதி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தும், பூங்கொத்துக்கள் மற்றும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். மேலும், 13 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி கௌஷிகாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.