காட்டாற்று வெள்ளத்தை கடந்து சேற்றில் சிக்கிய ஜீப்.. மலைவாழ் மக்கள் உதவியுடன் மீட்பு! - Jeep stuck in mud at erode - JEEP STUCK IN MUD AT ERODE
🎬 Watch Now: Feature Video
Published : Jun 8, 2024, 2:14 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதனால் கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் இடையே ஓடும் குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகையால், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் மக்கள் புதியதாக கட்டுப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை நடக்க பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், வாகனங்கள் அப்பாலத்தில் செல்ல முடியாத நிலையில், குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் வடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடம்பூரில் இருந்து அரசு பேருந்தில் பயணித்த மாக்கம்பாளையம் மக்கள் குரும்பூர் பள்ளத்தில் இறக்கிவிடப்பட்டனர். பயணிகள் உயர்மட்ட பாலம் வழியாக மறுகரைக்கு சென்றனர். அதன்பிறகு குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் சற்று வடிந்ததால் குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்றை கடந்து மறுகரைக்கு ஏறும்போது ஜீப்பின் சக்கரம் சேற்றில் சிக்கிக்கொண்டது.
அப்போது மலைவாழ் மக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பின், ஜீப்பை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஜீப் கூட இயக்க முடியாத நிலையில், குரும்பூர் பள்ளத்தில் இறங்கிவிடப்பட்ட பயணிகள், 12 கி.மீ தூரம் நடந்தே சென்றனர். சமீபத்தில் மாக்கம்பாளையம் மக்கள் போக்குவரத்து வசதியின்றி படும் சிரமங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதனடிப்படையில் கிடப்பில் போடப்பட்ட உயர்மட்ட பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் நடந்து செல்வதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், காட்டாற்று வெள்ளம் காரணமாக கடந்த 1 மாதமாக கடம்பூரில இருந்து அரசு பேருந்து மாக்கம்பாளையத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.