Live: தூத்துக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை! - MK Stalin campaign in Thoothukudi - MK STALIN CAMPAIGN IN THOOTHUKUDI
🎬 Watch Now: Feature Video
Published : Mar 26, 2024, 6:56 PM IST
|Updated : Mar 26, 2024, 7:49 PM IST
தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐயுஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நேரலை காட்சிகள்..முன்னதாக, இன்று காலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி, தமிழ் சாலை ரோட்டில் காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மீனவர் வீட்டிற்குள் திடீரெனச் சென்ற முதலைச்சர் அவர்களிடம் நலம் விசாரித்து, அவர்கள் வீட்டில் தேநீர் அருந்தினார்.தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரப் பகுதியின் முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் செல்பி எடுத்தும், கைகளை கொடுத்தும் மகிழ்ந்தனர்.இந்த வாக்கு சேகரிப்பில் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Last Updated : Mar 26, 2024, 7:49 PM IST