அவிநாசி கோயிலில் போட்டோஷூட்டுக்கு தடையா? பக்தர்களுடன் ஊழியர்கள் வாக்குவாதம்! - Avinashi Lingeswarar Temple - AVINASHI LINGESWARAR TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Jul 17, 2024, 10:41 PM IST
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்நிலையில், ராஜ கோபுரம் முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்று இரண்டு பெண்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
ஏற்கனவே கோயில் நிர்வாகம் யாரும் கோயில் முன்பு நின்று போட்டோக்கள் எடுக்கக்கூடாது எனக் கூறி மேற்பார்வைக்காக ஆட்கள் நியமிக்கப்பட்ட நிலையில், டீ சர்ட் மற்றும் பெர்முடாஸ் அணிந்த நபர் ஒருவர் இந்த இரண்டு பெண்களிடம் இங்கு போட்டோ சூட் எடுக்கக்கூடாது கிளம்புங்கள் என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பெண்கள் மரியாதையாக பேசுங்கள், நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஃபுரபசனில் இருப்பவர்கள், மேலும் நாங்கள் கோயில் நிர்வாகியிடம் அனுமதி பெற்றுதான் போட்டோக்கள் எடுத்தோம். அனைத்தையும் கூறுவதற்கு ஒரு முறையுள்ளது, ஆனால், நீங்கள் அப்படி எங்களிடம் அதை கூறவில்லை என பதிலுக்கு பேச அந்நபருக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் வளாகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.