மனு அளித்த பத்து நிமிடத்தில் நடவடிக்கை: திருப்பத்தூர் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு! - திருப்பத்தூர் ஆட்சியர் தர்ப்பகராஜ்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 5, 2024, 4:30 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த வெலக்கல்நாத்தம் கிட்டப்பையனூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் மாலதி (வயது 25) முதுகலை உயிரி தொழிற்நுட்பம் (BioTechnology) படிப்பு முடித்து விட்டு, தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு தசை சிதைவு நோய் ஏற்பட்டு கால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சில வருடங்களாக அவதியுற்ற மாணவி இன்று (பிப். 5) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை மற்றும் சக்கர நாற்காலி வேண்டுமென மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட 10 நிமிடத்திலேயே மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாணவிக்கு சக்கர நாற்காலி வழங்கினார்.
சக்கர நாற்காலியைப் பெற்றுக் கொண்ட மாணவி மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்தார். இது குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை காண்போர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.