தூய்மை பணியாளர் கையால் பள்ளி புதிய கட்டத்திற்கு அடிக்கல் நாட்ட செய்த எம்.எல்.ஏ! - Tirupathur Adi Dravidar school - TIRUPATHUR ADI DRAVIDAR SCHOOL
🎬 Watch Now: Feature Video
Published : Jul 15, 2024, 10:41 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 67 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் புதியதாக நான்கு வகுப்பறைகள் கட்டப்படுவதற்கு பூமி பூஜை இன்று(ஜூலை 15) நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,பூமி பூஜையில் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்களை அழைத்த எம்.எல்.ஏ நல்லதம்பி, அவர்களிடம் செங்கலை கொடுத்து அடிக்கல் நாட்ட சொன்னார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக வகுப்பறைக்குள் சென்று இனிப்புகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், துணைத் தலைவர் பழனி, கந்திலி ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.